/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு
/
கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு
கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு
கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை: தங்கமணி பேச்சு
ADDED : நவ 19, 2024 01:56 AM
சேந்தமங்கலம், நவ. 19-
''இந்தியாவில் கஞ்சா விற்பனையில், தமிழகம் முன்னிலையில் உள்ளது,'' என, சேந்தமங்கலத்தில் நடந்த, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். சேந்தமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நேற்று செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். பேரூர் கழக செயலாளர் ஆனந்த்குமார் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்து, அ.தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு, அண்டை மாநிலமான பீஹார் மாநிலத்தில் அரசு நிதியுதவி தர முடியாது என கை விரித்துள்ளது. இதேபோல், பிற மாநிலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தற்போது, சொந்த இடத்தில் இருந்து மண் எடுத்து சென்றாலும், தி.மு.க., ஆதரவாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவிலேயே, கஞ்சா விற்பனையில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது,'' என்றார்.

