/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் இடமாறுதலை கண்டித்து ஆசிரியர், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
அரசு பள்ளியில் இடமாறுதலை கண்டித்து ஆசிரியர், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு பள்ளியில் இடமாறுதலை கண்டித்து ஆசிரியர், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு பள்ளியில் இடமாறுதலை கண்டித்து ஆசிரியர், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 28, 2024 01:10 AM
அரசு பள்ளியில் இடமாறுதலை கண்டித்து
ஆசிரியர், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ப.வேலுார், செப். 28-
பாண்டமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் இடமாறுதலை கண்டித்து, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக தங்கவேல் பணியாற்றி வருகிறார். 6 முதல், 12ம் வகுப்பு வரை, 390 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக, 12 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் ஈஸ்வரி, 55.
சில நாட்களுக்கு முன் ஆசிரியர் ஈஸ்வரி, மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்ய ஆணை வந்தது.
அதேபோல், மல்லசமுத்திரத்தில் பணியாற்றி வரும் ஆசிரியை சுசிலா, பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதனால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இங்கு பணியாற்றி வரும் விலங்கியல் ஆசிரியர் ஈஸ்வரி, தொடர்ந்து இப்பள்ளியில் பணியாற்ற வேண்டுமென, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள், நேற்று மாலை, 4:30 மணிக்கு பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, 34 ஆசிரியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நாமக்கல், எம்.பி., மாதேஸ்வரன் பாண்டமங்கலம் டவுன் பஞ்., தலைவர் சோமசேகர், ஆசிரியர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆசிரியர் ஈஸ்வரி, இடமாறுதல் ரத்து செய்யப்படும், என, எம்.பி., மாதேஸ்வரன் உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.