/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் ஆசிரியர் மன்றத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்

ADDED : பிப் 06, 2025 05:29 AM
நாமக்கல்: 'புத்தகத்திருவிழா பெயரில் கட்டாய பணம் வசூல் நடத்துவதைக் கண்டித்து, நாளை நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
மாவட்ட நிர்வாகம் சார்பில், 3வது புத்தகத் திருவிழா, நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில், வரும், 10 வரை நடக்கிறது. 2024ல் நடந்த புத்தகத் திருவிழாவிற்கு, மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு, தலா, 500 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, அதற்குரிய புத்தகம் பின்னர் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு, எவ்விதமான தகவலும் தெரிவிக்காமல்,
கலந்தாய்வு எதுவும்
நடத்தாமல், 'மேலிட உத்தரவு' என்ற பெயரில்,
வட்டாரக்கல்வி அலுவலர் களால் கட்டாய வசூல் நடக்கிறது.
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களிடம் எந்தவிதமான கருத்துக்களும் கேட்காமல், வசூல் நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. புத்தகத் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இந்த சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்து, நாமக்கல் வட்டாரக் கல்வி அலுவலகம் முன், நாளை மாலை, 5:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.