/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
/
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
ADDED : அக் 20, 2024 04:16 AM
நாமக்கல்: தமிழகக்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அக-விலைப்படி உயர்வு அளித்த அறிவிப்பை, ஆசிரியர்கள் சங்கத்-தினர் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு பணியாளர்களுக்கு, கடந்த ஜூலை, 1 முதல், 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்த்தப்பட்-டுள்ளது. இந்நிலையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த ஜூலை, 1 முதல், மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்-படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 50 சதவீ-தமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்ந்து, 53 சதவீத-மாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.
இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதுடன், அரசின் உத்த-ரவை வரவேற்கிறோம். மேலும், மத்திய அரசு, 2025, ஏப்., முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதேபோல், விரைவில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவும், உயர்கல்விக்கான ஊக்கத் தொகையை வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க-வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.