/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியர் தேர்வு தேதியை மாற்றக்கோரி இ.பி.எஸ்.,சிடம் ஆசிரியர்கள் மனு
/
ஆசிரியர் தேர்வு தேதியை மாற்றக்கோரி இ.பி.எஸ்.,சிடம் ஆசிரியர்கள் மனு
ஆசிரியர் தேர்வு தேதியை மாற்றக்கோரி இ.பி.எஸ்.,சிடம் ஆசிரியர்கள் மனு
ஆசிரியர் தேர்வு தேதியை மாற்றக்கோரி இ.பி.எஸ்.,சிடம் ஆசிரியர்கள் மனு
ADDED : செப் 28, 2025 01:58 AM
ப.வேலுார்:அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கரூரில் நேற்று முன்தினம் தேர்தல்
பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, ப.வேலுார் வழியாக செல்லும்போது, பழைய பைபாசில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன், நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில், பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார், பிரேமலதா ஆகியோர், இ.பி.எஸ்.,சிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், பி.ஜி.டி.ஆர்.பி., தேர்வுக்கு, போதுமான கால அவகாசம் வழங்கி, எழுத்து தேர்வு நவ., மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனு அளித்திருந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடப்பட்டுள்ள அதே தேதியில் தேர்வு நடக்குமானால், மன உளைச்சலுக்கு ஆளான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், திண்டுக்கல்லில் நடந்த தற்கொலை சம்பவம் போன்று அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்வு தேதியை மாற்றம் செய்து, தமிழக அரசையும், ஆசிரியர் தேர்வு வாரியத்தையும் வலியுறுத்தி எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமாறு பட்டதாரி ஆசிரியர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என, தெரிவித்திருந்தனர்.