/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வரிடம் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
/
ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வரிடம் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வரிடம் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வரிடம் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : அக் 27, 2024 04:26 AM
நாமக்கல்: தமிழகத்தில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டிற்கே வழி-காட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான, பழைய ஓய்வூதிய திட்டத்தை உட-னடியாக அமல்படுத்த வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, சம்பளம் பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்தில் வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை, உயர்கல்வி பயின்றுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். 2009 ஜூன், 1க்கு பின் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு விகி-தாசாரத்தை, தற்போதுள்ள, 2:7 என்பதை, ஆசிரியர்களின் எண்-ணிக்கையின் அடிப்படையில், 1:9 ஆக மாற்ற வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண் மாறுபாடு காரணமாக முதுகலை ஆசிரியர்-களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் அனைத்தையும் உடனடி-யாக ரத்து செய்ய வேண்டும். பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.