/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் பூட்டு உடைப்பு போலீசார் 'சீல்' வைப்பு
/
கோவில் பூட்டு உடைப்பு போலீசார் 'சீல்' வைப்பு
ADDED : மே 11, 2025 01:13 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மெயின் கேட்டு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், கோவில் திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2022ல் போலீஸ், வருவாய்த்துறையினர் கோவிலை பூட்டி, 'சீல்' வைத்திருப்பதும்; இதையடுத்து, மூன்றாண்டுகளாக கோவில் திருவிழா நடத்தாமல் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், கோவில் திருவிழா மீண்டும் நடத்த வேண்டும் என்பதற்காக, ஒரு தரப்பினர் பூட்டை உடைத்திருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை உதவியுடன், மீண்டும் போலீசார் கோவிலை பூட்டி, 'சீல்' வைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.