நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: கோடைகாலம் துவங்கி உள்ளதால், வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். பணிக்கு செல்வோர், தங்களின் உடல் சூட்டை தணிக்க இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர் பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக இளநீர் விலை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம், ஒரு இளநீர், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 40 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த மாதம் இன்னும் விலை அதிகரிக்கும் என இளநீர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

