/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஜவுளி விற்பனை மந்தம்: கடைவீதி 'வெறிச்'
/
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஜவுளி விற்பனை மந்தம்: கடைவீதி 'வெறிச்'
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஜவுளி விற்பனை மந்தம்: கடைவீதி 'வெறிச்'
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஜவுளி விற்பனை மந்தம்: கடைவீதி 'வெறிச்'
ADDED : அக் 28, 2024 05:05 AM
நாமக்கல்: தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், ஜவுளி கடைகளில் விற்பனை மந்தமாக உள்ளது. அதனால், நாமக்கல் கடைவீதியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகை, வரும், 31ல், கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளிக்கு சில வாரங்கள் முன்னதாகவே துணிகள், பட்டாசு விற்பனை களைக்கட்ட தொடங்கிவிடும். நாமக்கல் நகரில் கடைவீதி, சேலம் சாலையில், ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன. இங்கு, தீபாவளி பண்டிகையையொட்டி, பல்-வேறு புதிய ரகங்கள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும், மூன்று நாட்களே உள்ள நிலையில், கடை-வீதியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், சாலையோர கடைகளிலும், மக்கள் கூட்டம் இன்றி காற்றோடியது.தீபாவளி பண்டிகையையொட்டி, களைகட்டும் கடைவீதி மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால், ஜவுளிகள் விற்-பனை மந்தமாக உள்ளது. அதனால், ஜவுளி நிறுவனத்தினர் கவலை அடைந்துள்ளனர். சமீபமாக, 'ஆன்லைனில்' மிகக்கு-றைந்த விலையில் ஆடைகள் விற்கும் சில செயலிகள் மக்களி-டையே பிரபலமாக உள்ளது. அதில் பலரும் ஆர்டர் செய்து, துணிகளை வரவழைக்கின்றனர். அதனால், உள்ளூர் துணி வியா-பாரம் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும், மூன்று நாட்களே உள்ளதால், வியாபாரம் சூடுபிடிக்கும் என, ஜவுளி கடை உரிமையயாளர்கள் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கின்றனர்.