/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2 கோடியில் திட்டப்பணி தங்கமணி துவக்கி வைப்பு
/
ரூ.2 கோடியில் திட்டப்பணி தங்கமணி துவக்கி வைப்பு
ADDED : செப் 27, 2025 01:20 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சியில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி துவக்கி வைத்தார்.
பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆண்டிக்காடு, முத்து மாரியம்மன் கோவில் பகுதி, மாதாபுரம், பெரியார் நகர், பாவடி தெரு, கண்டிபுதுார் குளத்துக்காடு தில்லை நகர் உள்ளிட்ட பகுதியில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு திட்ட நிதி மற்றும் எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து, 2 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி கட்டடம், தார்ச்சாலை, சிமென்ட் சாலை, குடிநீர் தொட்டி, சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
அதை, நேற்று, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். மேலும், நகராட்சி பகுதியில் புதிதாக தார்ச்சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டப்பணிகள் அமைக்க, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.பள்ளிப்பாளையம் அ.தி.மு.க., நகர செயலாளர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலாளர் சுப்பிரமணி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.