/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் காப்பாளர் இல்லை 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அவலம்
/
ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் காப்பாளர் இல்லை 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அவலம்
ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் காப்பாளர் இல்லை 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அவலம்
ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் காப்பாளர் இல்லை 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அவலம்
ADDED : மே 05, 2025 02:57 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் காப்பாளர் இல்லாததால், கடந்த, நான்காண்டுகளாக போதிய பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 1958ம் ஆண்டு, அப்-போதைய முதல்வர் காமராஜரால் தொடங்கப்பட்டது. மாணவர்-களின் நலனுக்காக, கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், எலச்சிபா-ளையம், சந்தைப்பேட்டை மற்றும் போலீஸ் ஸ்டேஷன் அருகே தனியார் இடத்தில் மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது. மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை அடுத்து, பள்ளி வளாகத்தில், கடந்த, 2003 ஜூலை, 16ல், 'தாட்கோ' மூலம், 31.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 100 மாணவர்கள் தங்கி பயிலும் அளவுக்கு, ஆதிதிராவிடர் மாணவர் நல விடு-தியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தற்-போது, விடுதி காப்பாளர் இல்லாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும், கடந்த, நான்காண்டுகளாக விடுதி பூட்டப்பட்-டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ் கூறிய-தாவது: எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் பயின்ற மாணவர்கள், தற்போது, அதே பள்ளியில் ஆசிரியராகவும், வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பல்வேறு அரசு பணிகளிலும், தனியார் துறைகளிலும், சொந்தமாக தொழில் செய்பவர்களாகவும் நல்ல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், தற்போது அந்த மாணவர் விடுதி காட்சிப்பொருளாகி பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. வெகு துாரத்தில் இருந்து வரும் மாணவர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
விவசாயி மாரிமுத்து கூறியதாவது: இப்பள்ளியில், கடந்த கல்வி-யாண்டு வரை, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 445 மாணவ, மாணவியர் பயின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், விடுதி காப்-பாளர், மூன்று அல்லது நான்கு விடுதிகளுக்கு பொறுப்பாளர்க-ளாக நியமிக்கப்பட்டனர். இதனால், மாணவர்களை முறையாக கண்காணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வேறு வழியில்-லாமல், மாணவர்களே விடுதியை நிர்வகிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், மாணவர்களை விடுதியில் சேர்க்கும் நிலை படிப்படி-யாக குறைந்து, இறுதியில் விடுதியை பூட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
டிரைவர் முனியப்பன் கூறியதாவது: நுாறு மாணவர்கள் வரை தங்கி பயிலும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி, பூட்டி கிடப்பது அதிருப்தியாக உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு நிரந்தர விடுதி-காப்பாளர், சமையலர், இரவு காவலர் நியமிக்க ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.