/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
65 ஆண்டுகளாகியும் கம்பீரமாக உள்ள பாலம்
/
65 ஆண்டுகளாகியும் கம்பீரமாக உள்ள பாலம்
ADDED : அக் 02, 2025 02:24 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே, 65 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலம், வெள்ளப்பெருக்கு, மழை உள்ளிட்ட இடர்பாடுகளை சந்தித்தும், தற்போதுவரை கம்பீரமாக பயன்பாட்டில் உள்ளது.
நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே, 32 பில்லருடன், 442 மீட்டர் துாரத்திற்கு, பாலம் கட்டப்பட்டு, 1960ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பலமுறை காவிரி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது, இந்த பாலத்தை தொட்டுக்கொண்டு தண்ணீர் சென்றது. மேலும் இடி, மின்னல், வெள்ளம் என அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.
ஈரோட்டில் இருந்து பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, சேலம், நாமக்கல், திருச்சி, ராசிபுரம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ், லாரி, கார், வேன், டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், இந்த பாலம் வழியாக செல்கிறது. தற்போது பாலம் கட்டப்பட்டு, 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்னும் கம்பீரமாக தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.