/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிஞ்சு விரல்களில் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
/
பிஞ்சு விரல்களில் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
பிஞ்சு விரல்களில் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
பிஞ்சு விரல்களில் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
ADDED : அக் 03, 2025 01:39 AM
நாமக்கல், 'காலைக்கதிர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் நடத்திய, 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சியில், பிரபல கல்வியாளர்கள், மழலையரின் பிஞ்சு விரல்களை பிடித்து, 'அ'னா 'ஆ'வன்னா எழுத வைத்து, கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த நிகழ்வில், ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.
நவராத்திரி நிறைவில் வரும் விஜயதசமியன்று தொடங்கப்படும் கல்வி, கலை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் வெற்றி அடையும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நன்னாளில் பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதும், கல்வி கற்பதன் தொடக்கமாக, 'அ'னா, 'ஆ'வன்னா எழுத வைப்பதும் வழக்கம். அதனால், 'காலைக்கதிர்' நாளிதழின் மாணவர் படைப்பான 'பட்டம்' இதழ், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியுடன் இணைந்து, வேப்பநத்தத்தில் உள்ள அப்பள்ளியில், 'அ'னா...' 'ஆ'வன்னா... அரிச்
சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை நேற்று நடத்தின. 'காலைக்கதிர்' மண்டல பொது மேலாளர் பாலாஜி(வர்த்தகம்) வரவேற்றார்.
நாமக்கல் எஸ்.பி., விமலா, மருத்துவர் சியாமளா, நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சரஸ்வதி பூஜையை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களான விமலா, சியாமளா, சரவணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆகியோர், குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து, 'அ'னா, 'ஆ'வன்னா எழுத வைத்து, கல்வி கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர். பிரபலங்களின் கைகளால், தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பம் நடப்பதை, ஏராளமான பெற்றோர், நெகிழ்ச்சியுடன்
கண்டுகளித்தனர்.
அனைத்து குழந்தைகளுக்கும், பென்சில் பாக்ஸ், சிலேட், ரப்பர், ஷார்ப்னர், கிரையான்ஸ், கலரிங் புக் அடங்கிய, 'ஸ்கூல் பேக்' உள்பட, 1,000 ரூபாய் மதிப்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் பெற்றோர் பின்னணியில் நிற்க, மழலையர் எழுத தொடங்கிய காட்சியை பதிவு செய்து, புகைப்படத்துடன் கூடிய, 'காலைக்கதிர்' சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர்கள் ராஜா
சுந்தரவேல், விக்டர் பிரேம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் சேலத்திலும், 3 இடங்களில், காலைக்கதிர், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சிகள் நடந்தன.
நன்றி
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் நடந்த 'அரிச்
சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெற்றோர்; மழலையருக்கு, 'அ'னா 'ஆ'வன்னா எழுத வைத்த பிரபலங்கள்; இணைந்து நடத்திய நாமக்கல், வேப்பநத்தம் நேஷனல் பப்ளிக் பள்ளி, சேலம் ஸ்ரீவித்யவாணி வித்யாலயா, ஏ.வி.ஆர்., ஸ்வர்ண மஹால் நிறுவனம், இடைப்பாடி யுனிவர்சல் பப்ளிக் பள்ளி, கூட்டாத்துப்பட்டி கேலக்ஸி பள்ளி மற்றும் நிகழ்ச்சி நடத்த உதவிய அனைவருக்கும், 'காலைக்கதிர்' சார்பில் நன்றி.
'மழலை சொல்
மகிழ்ச்சி'
கடந்த காலத்தில் மாணவர்களே படித்துக்கொள்ளும் நிலை இருந்தது. தற்போது பெற்றோர்கள் தான், மாணவர்கள் படிக்க உறுதுணையாக இருக்கின்றனர். இன்று வந்துள்ள பெற்றோரை பார்த்தாலே, அது நன்றாக தெரிகிறது. என்னை போன்று போலீஸ் துறையில் அதிகாரியாக வேண்டும் என ஒரு மழலை சொல்வதை கேட்டது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
- எஸ்.விமலா, எஸ்.பி., நாமக்கல்.
'நல்லதொரு நிகழ்ச்சி'
இந்த நிகழ்ச்சி பெற்றோருக்கு மிக உதவியாக இருக்கும். மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல நாளில் கல்வியை தொடங்கியுள்ளோம் என்ற நிறைவை தரும். எனக்கும் மிக மகிழ்ச்சியாக உள்ளது. நல்லதொரு நிகழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.
- சுமன், மாவட்ட வருவாய் அலுவலர், நாமக்கல்.
'உணர்வுப்பூர்வமாக இருந்தது'
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களின் அரவணைப்பை பார்க்கும்போது உணர்வுப்பூர்வமாக இருந்தது. காலைக்கதிர் நாளிதழின் ஒருங்கிணைப்பு கச்சிதம். குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் பிரகாச வாழ்வை வழங்கும் கல்வி அறிவை பெற, இந்த நாளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இது அடுத்த தலைமுறை பெற்றோருக்கான ஆசை.
- பி.வி.சியாமளா,
மருத்துவர், நாமக்கல்.
'காலைக்கதிரின் சமூக பொறுப்பு'
காலைக்கதிர் நாளிதழ் செய்தி, விளம்பரம் என்று மட்டும் நிற்காமல் மக்கள் பணிக்கான ஒருங்கிணைப்பையும் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பணி மூலம், 'காலைக்கதிர்' நாளிதழ், சமூக பொறுப்பு கொண்ட நிறுவனம் என்பதை நிரூபித்துள்ளது. பெற்றோர் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி, நிறைவை பார்க்க முடிந்தது.
- கே.பி.சரவணன், தாளாளர், நேஷனல் பப்ளிக் பள்ளி,
வேப்பநத்தம், நாமக்கல்.
பெற்றோர் பேட்டி
'போட்டோ வழங்கியது நெகிழ்ச்சி'
மிக மகிழ்ச்சியாக என் குடும்பத்தினர் உணர்ந்தனர். படித்து பெரிய நிலையில் உள்ள அதிகாரிகள், எங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி, படிப்பை தொடங்கி வைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நாளின் நினைவாக போட்டோ, பேக், நோட்டுகள் வழங்கியது மிகவும் நெகிழ்ச்சி.
- நதியா ராஜேஸ்குமார், நல்லிபாளையம்.
'கடவுள் அருள் கிடைக்கும்'
விஜயதசமியில் கல்வியை தொடரும் குழந்தைகளுக்கு நிச்சயம் கடவுள் அருள் கிடைக்கும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாலை முதலே தயாராகி விட்டோம். முதல் நபராக பள்ளிக்குள் வர நினைத்தோம். அதுவும் நடந்துவிட்டது. விழா ஏற்பாடு செய்த காலைக்கதிருக்கு நன்றி.
- ஆர்.பிரியா, எருமப்பட்டி.
'வரமாக பார்க்கிறோம்'
காலைக்கதிரின் இந்த பணியை பெற்றோராகிய நாங்கள் பெருமையுடன் வரவேற்கிறோம். மகிழ்ச்சியான நாள். இது போன்று அனைத்து குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. இந்த நிகழ்ச்சியை வரமாக பார்க்கிறோம். குழந்தையும் மிகவும் ரசித்து பங்கேற்றான்.
- செ.மணிசாரதி, அரசநத்தம்.
'ரசித்து பார்த்தோம்'
நிகழ்ச்சி தொடங்கியது முதல் முடியும் வரை இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் வந்தோம். ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து பார்த்தோம். திட்டமிட்டு நன்றாக நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளனர். பரிசு பொருட்கள் என திக்கு முக்காட வைத்துவிட்டனர். பள்ளிக்கும், காலைக்கதிருக்கும் நன்றி.
- பி.திருமூர்த்தி, வீசாணம்.