sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் ஜன., 25ல் வெள்ளோட்டம்

/

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் ஜன., 25ல் வெள்ளோட்டம்

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் ஜன., 25ல் வெள்ளோட்டம்

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் ஜன., 25ல் வெள்ளோட்டம்


ADDED : டிச 22, 2025 09:06 AM

Google News

ADDED : டிச 22, 2025 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் புதிய தேர், வரும் ஜன., 25ல் வெள்ளோட்டம் நடக்-கிறது என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்-கப்பட்டுள்ளது.தமிழகத்தில், மூன்றாவது பெரிய தேர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ளது.

இந்த தேர் சேதமானதால், 2.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்-கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, 80 டன் இலுப்பை மரம், 10 டன் வேம்பு, 10 டன் தேக்கு உள்-ளிட்ட மரங்களை கொண்டு, 22 அடி உயரம், 22 அடி அகலம் கொண்ட இரும்பு அச்சுடன் கூடிய பெரிய தேர் கட்டுமான பணியை, திருவாரூர் ஆழித்தேர் ஸ்தபதி இளவரசன் தலைமையில், 20 பேர் கொண்ட குழுவினர் மேற்-கொண்டனர். பூதபார், பூதபார் பீடம், சிறிய உருதாரம், பெரிய உருதாரம், நடகாசனம், தேவாசனம், சிம்மாசனம் என, ஏழு நிலைகளுடன், கட்டுமான பணிகள், 100 சதவீதம் முடிந்துள்ளன. இந்நிலையில், நேற்று 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருச்சி பெல் நிறுவ-னத்தால் தயாரிக்கப்பட்ட, 3,500 கிலோ எடை கொண்ட, இரண்டு இரும்பு அச்சு, பி.ஆர்.டி., நிறுவ-னங்களின் தலைவர் தங்கராஜ், மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் ஆகியோர், கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து ஆகியோரிடம் ஒப்படைத்-தனர். வரும் ஜன., 25ல் புதிய தேர் வெள்ளோட்டம் நடக்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரி-விக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us