/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்' என அழைப்பு நேரில் சென்று மாணவருக்கு அதிர்ச்சி அளித்த கலெக்டர்
/
'எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்' என அழைப்பு நேரில் சென்று மாணவருக்கு அதிர்ச்சி அளித்த கலெக்டர்
'எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்' என அழைப்பு நேரில் சென்று மாணவருக்கு அதிர்ச்சி அளித்த கலெக்டர்
'எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்' என அழைப்பு நேரில் சென்று மாணவருக்கு அதிர்ச்சி அளித்த கலெக்டர்
ADDED : ஜூலை 17, 2025 02:27 AM
நாமக்கல், 'எங்கள் பள்ளிக்கு வரவேண்டும்' என, வாட்ஸாப்பில் கோரிக்கை விடுத்த மாணவருக்கு, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, நேரில் சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஜய், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்திக்கு, 'தாங்கள் ஆட்சியர் பணிக்கு எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள்
என்பதை அறிந்தேன். எனவே, தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும்' என, 'வாட்ஸாப்'பில் கடிதம் அனுப்பி இருந்தார். நாமக்கல் கலெக்டராக பொறுப்பேற்ற துர்கா மூர்த்தி, இரண்டாம் நாள் மாணவர் விஜயின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் ஆய்வு பணி மேற்கொண்டபோது, அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். தொடர்ந்து, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பிற்கு சென்று அந்த மாணவருடன் கலந்துரையாடினார்.அப்போது நடந்த உரையாடல்:
மாணவன்: போட்டி தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்?
கலெக்டர்: ஆங்கிலத்தில் எழுதினேன்.
மாணவன்: ஏன் தமிழில் எழுத முடியாதா?
கலெக்டர்: ஏன் முடியாது. தாராளமாக தமிழில் நம் தாய் மொழியில் எழுதலாம். இந்திய ஆட்சிய பணியில் தேர்வு பெற்றவர்கள் நிறையபேர், தன் தாய் மொழியில் எழுதியுள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்.
மாணவன் மற்றும் கலெக்டரின் கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்தது. தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர், 'நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வரவேண்டும்' என, அறிவுரை வழங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.