/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் மயானம் முன் குளம்போல்தேங்கிய கழிவு நீரால் அவதி
/
மின் மயானம் முன் குளம்போல்தேங்கிய கழிவு நீரால் அவதி
மின் மயானம் முன் குளம்போல்தேங்கிய கழிவு நீரால் அவதி
மின் மயானம் முன் குளம்போல்தேங்கிய கழிவு நீரால் அவதி
ADDED : மே 01, 2025 01:50 AM
சேந்தமங்கலம்:கழிவுநீர் வாய்க்கால் உடைந்து மின் மயானம் முன் குளம்போல் தேங்கிய கழிவுநீரால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., கொல்லிமலை சாலை அருகே புதிதாக மின்மயானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மின் மயானம் எதிரே, டவுன் பஞ்., கழிவுநீர் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு வந்தது. கழிவுநீர் வாய்க்கால், சில மாதங்களுக்கு முன் உடைந்ததால், கழிவு நீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் மண்ணை கொட்டி அடைப்பை சரி செய்தனர். இதனால் அந்த கழிவுநீர், காளப்பநாய்க்கன்பட்டி புறவழிச்சலை குறுக்கு பாதையில் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.