/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பன்றி வேட்டையாட வைத்திருந்த துப்பாக்கி வெடித்து விவசாயி காயம்
/
பன்றி வேட்டையாட வைத்திருந்த துப்பாக்கி வெடித்து விவசாயி காயம்
பன்றி வேட்டையாட வைத்திருந்த துப்பாக்கி வெடித்து விவசாயி காயம்
பன்றி வேட்டையாட வைத்திருந்த துப்பாக்கி வெடித்து விவசாயி காயம்
ADDED : ஆக 29, 2024 07:53 AM
எருமப்பட்டி: கொல்லிமலை, சேளூர் நாட்டை சேர்ந்தவர் சுப்பரமணி, 55; விவசாயி. இவர், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள தோட்டமுடையாம்பட்டி கிராமத்தில், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளார்.
அறுவடைக்கு தயாரானதால் பட்டரை போடுவதற்காக, அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் குடியிருக்கும் அண்ணன் அரப்புலியை அழைத்து வர, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சென்றுள்ளார். அப்போது, காந்தி தோட்டம் என்ற இடத்தில் சென்றபோது, மாந்தோப்பில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக மறைத்து வைத்திருந்த துப்பாக்கி கயிற்றை காலில் தெரியாமல் இழுத்துள்ளார்.
அப்போது, பன்றிகள் அந்த வழியாக சென்றால், கால் பட்டு வெடிக்கும் வகையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்துள்ளது. இதில், சுப்ரமணியின் முழங்கால் கீழ் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அங்கிருந்தவர்கள், சுப்ரமணியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

