/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடக்கம்

ADDED : அக் 23, 2024 07:20 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில் ஐப்பசி, 5ம் நாளான நேற்று இரவு, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஊரின் முக்கிய பிரமுகர்கள் கையில் பூக்களுடன் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று, பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பூக்கூடைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவந்து நித்திய சுமங்கலி மாரியம்மன் மேல் பூக்களை கொட்டி பூச்சாட்டினர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 1,008 கிலோ பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தினமும் பல்வேறு அமைப்பினர் மூலம் சிறப்பு அலங்காரம் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை, கம்பம் நடும் நிகழ்ச்சியும், நவ., 4ல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5ல் கொடியேற்று விழா நடக்கிறது. 7 அதிகாலை, 4:00 மணிக்கு தீமிதிக்கும் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ல் சப்தாபரணத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.