/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய குற்றவியல் சட்டத்தில் நாமக்கல்லில் முதல் வழக்கு
/
புதிய குற்றவியல் சட்டத்தில் நாமக்கல்லில் முதல் வழக்கு
புதிய குற்றவியல் சட்டத்தில் நாமக்கல்லில் முதல் வழக்கு
புதிய குற்றவியல் சட்டத்தில் நாமக்கல்லில் முதல் வழக்கு
ADDED : ஜூலை 02, 2024 08:00 AM
நாமக்கல்: நாமக்கல், ரங்கர் சன்னதி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 36; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மதியம், 3:00 மணியளவில், நாமக்கல் -- சேலம் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்-பிட்டு விட்டு, பொன்நகர் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, இவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்-தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மணிகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்-தனர். நாமக்கல் போலீசார், லாரி டிரைவரான நாமக்கல் என்.கொசவம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி, 58, என்பவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் புதிய குற்றவியல் சட்-டப்படி, பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது-வாகும்.
இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர-பாண்டியன் கூறுகையில், ''கடந்த காலங்களில் விபத்து மரணத்தை ஏற்படுத்தும் டிரைவருக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். ஆனால், புதிய குற்றவியல் சட்டப்படி, 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.