/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
/
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
ADDED : டிச 31, 2025 05:50 AM

நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சொர்க்க வாசல் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில், ஒரே கல்லில் உருவான, மலையின் கிழக்கு பகுதியில், அரங்கநாயகி தாயார் உடனுரை அரங்கநாதர் கோவில் உள்ளது. மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்து-றையின் கட்டுப்பாட்டில் உள்ளது.கி.பி., 7ம் நுாற்றாண்டில், குணசீல அதியன் குல மன்னரால் உருவாக்கப்பட்ட புராண சிறப்பு பெற்-றது. இங்கு, கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது, அனந்த சயனக்கோலத்தில், அரங்கநாதர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுவாமி மூலவர் மற்றும் பரிவார தெய்வ சிலைகள் அனைத்தும் மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி அன்று, இக்-கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்படும்.
பல கோவில்களில், வைகுண்ட ஏகாதசி நாளில், சுவாமி உற்சவர் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். நாமக்கல்லில், சுவாமியின் ஜடாரி மட்டுமே சொர்க்கவாசல் வழியாக எடுத்து வருவது சிறப்பு. அதன்படி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதி-காலை, 4:15 மணிக்கு, கோவில் பட்டாச்சாரி-யார்கள் சொக்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, ஆகம விதிப்படி சொர்க்கவாசல் எனும் பரமபாத வாசல் வழியாக, சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை
நடந்தது.
நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, டி.ஆர்.ஓ., சர-வணன், எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், எஸ்.பி., விமலா, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிர-முகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். கடும் பனி-யிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரி-சையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்-தனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்ப-டுத்த, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்க-னவே கோவிலில் பொருத்தப்பட்ட, 10 'சிசிடிவி' கேமாரவுடன், மேலும், 10 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்-தப்பட்டது.
அதேபோல், எஸ்.பி., விமலா தலைமையில், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி-ருந்தனர். மேலும், போக்குவரத்தும் மாற்றப்பட்டி-ருந்தது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
* எலச்சிபாளையம் அடுத்த ஏளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேசிகநாதர் பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.
* சேந்தமங்கலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மூலவருக்கு, 21 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதி-காலை, 4:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன், பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* வெண்ணந்துார், கல்லாங்குளம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில், வேணுகோபால பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்-சன சேவை நடந்தது. தொடர்ந்து, துளசி மாலை அணிவித்து, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
* ராசிபுரம் அடுத்துள்ள சிங்களாந்தபுரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகற்பூர நாராயண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. அதி-காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியில் உள்ள கொங்கு திருப்பதி கோவிலில், நேற்று வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு, அதி-காலை 4:00 மணிக்கு சொக்கவாசல் திறக்கப்பட்-டது.
* மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டியில் சென்றாயபெருமாள் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், லட்டு பிர-சாதம்
வழங்கப்பட்டது.

