/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மூன்றாவது மொழிக்கு தடையாக நின்று மூன்று வேளைக்கும் மது விற்கும் அரசு'
/
'மூன்றாவது மொழிக்கு தடையாக நின்று மூன்று வேளைக்கும் மது விற்கும் அரசு'
'மூன்றாவது மொழிக்கு தடையாக நின்று மூன்று வேளைக்கும் மது விற்கும் அரசு'
'மூன்றாவது மொழிக்கு தடையாக நின்று மூன்று வேளைக்கும் மது விற்கும் அரசு'
ADDED : மார் 17, 2025 04:07 AM
நாமக்கல்: ''மாணவர்கள் முன்னேற படிக்க வேண்டும்; மூன்று மொழி படிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கூடாது என்கிறது. மும்மொழிக்கு பதிலாக மூன்று வேளைக்கும் சாராயம் குடிப்பதற்கு டாஸ்மாக் மதுக்க-டையை திறந்து வைத்துள்ளது,'' என, த.மா.கா., மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டல த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் மாநில தலைவர் வாசன் பங்கேற்றார். அப்-போது அவர் கூறியதாவது:தி.மு.க., அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத அரசாக, செயலற்று வருகி-றது. தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, டாஸ்மாக் கடையால் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பிரச்னைகள் அரங்கேறி வருகின்றன. மாணவர்கள் முன்னேற படிக்க வேண்டும்; மூன்று மொழி படிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கூடாது என்கிறது. மும்மொழிக்கு பதிலாக, மூன்று வேளையும் சாராயம் குடிப்பதற்கு டாஸ்மாக் திறந்திருக்கிறது.
தாய் மொழியை படித்துக்கொண்டு, தொடர்மொழி ஆங்கிலம் இருந்த போதும், மூன்றாவதாக ஒரு மொழியை அவரவர் விருப்பப்படி கற்றுக்கொள்ளலாம் என்றுதான் தேசிய கல்விக்கொள்கை கூறுகிறது. லோக்சபா தொகுதி மறு சீரமைப்பு என்பது எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வராத நிலையில், தி.மு.க., கற்பனை செய்து கொண்டு, போராட்-டங்களை நடத்தி வருகிறது. இவ்வாறு வாசன் கூறினார்.