/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றின் உயர்மட்ட பாலத்தில்மின்விளக்கு எரியாததால் கும்மிருட்டு

ADDED : ஏப் 17, 2025 02:07 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தில் மின்விளக்கு எரியாததால் கும்மிருட்டாக காணப்படுகிறது.
நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக, சேலம், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இது முக்கிய பாலமாக காணப்படுகிறது.
இந்த பாலத்தின் இருபுறத்திலும் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த மின்விளக்கு அனைத்தும் எரியாததால், பாலம் கும்மிருட்டாக காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக டூவீலரில் சென்ற வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, பாலத்தில் எரியாமல் உள்ள மின் விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.