/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கத்திரி' வெயில் துவங்கிய முதல் நாளே தாக்கம் அதிகரிப்பு
/
'கத்திரி' வெயில் துவங்கிய முதல் நாளே தாக்கம் அதிகரிப்பு
'கத்திரி' வெயில் துவங்கிய முதல் நாளே தாக்கம் அதிகரிப்பு
'கத்திரி' வெயில் துவங்கிய முதல் நாளே தாக்கம் அதிகரிப்பு
ADDED : மே 05, 2024 02:30 AM
நாமக்கல்:நாமக்கல்
மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள
கம்மங்கூழ், இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை
அருந்தியும், உண்டும் வருகின்றனர். மேலும், குளிர்பானங்கள்,
பழச்சாறு, கரும்புச்சாறு ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
வெயில் கடுமையாக இருப்பதால், சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும்
வெளியே தலைகாட்ட முடியாமல், வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில்,
நேற்று முதல், 'அக்னி நட்சத்திரம்' என்ற கத்திரி வெயில் துவங்கி
உள்ளது. வரும், 28 வரை நீடிக்கும் கத்திரி வெயில் காலத்தில் மழை பெய்வது
வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்கள் மழையை
எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில், நேற்று கத்திரி வெயிலின் தாக்கம்
அதிகமாகவே காணப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு, 105 டிகிரி பாரன்ஹீட்
வெப்பம் அடித்தது. அதனால், பொதுமக்கள் பலரும் கடும்
அவதிக்குள்ளாகினர்.
மின் விசிறியும் அனல் காற்றை வீசியதால்,
புழுக்கத்தில் பலரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். அதனால்,
பலரும், கம்மங்கூழ், கரும்பு ஜூஸ் கடைக்கு படையெடுத்தனர். 'கத்திரி
வெயில்' ஆரம்பமே கடுமையாக இருப்பதால், எப்போது, முடியும் என,
பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.