/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூ வியாபாரி கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது
/
பூ வியாபாரி கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : ஜன 14, 2024 12:31 PM
பள்ளிப்பாளையம்: பூ வியாபாரி கொலையில், தலைமறைவாக இருந்த தறி தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே தாஜ்நகரை சேர்ந்த ஆறுமுகம், 62, பூ வியாபாரி. இவர் கடந்த, 6ம் தேதி கீழ்காலனி பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆறுமுகத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ஆறுமுகத்தை கொலை செய்தது, தாஜ்நகரை சேர்ந்த தறி தொழிலாளி ரவி என தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை, பள்ளிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது; தாஜ்நகரை சேர்ந்த தறி தொழிலாளி ரவி. இவருக்கும் வைதேகி என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்தது. பின், வைதேகி ஆறுமுகத்திடம் தொடர்பு வைத்ததால், ரவி கோபமடைந்து கடந்த, 5 இரவு ஆறுமுகத்தின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கொலைக்கு உதவி செய்ய சக்திவேல் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். தலைமறைவாக இருந்த ரவியை கடலுாரில் கைது செய்தோம். சக்திவேலை தேடி வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.

