/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையுடன் துவங்கிய 'கத்தரி' வெயில் நாமக்கல்லில் 157 மி.மீ., பதிவால் மகிழ்ச்சி

ADDED : மே 06, 2025 02:16 AM
நாமக்கல்:
'அக்னி நட்சத்திரம்' தொடங்கிய முதல் நாளிலேயே கோடை மழை வெளுத்து கட்டியதால், நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில், 157 மி.மீ., மழை பதிவானது.
நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்தரி வெயில் துவங்கியது. வரும், 28 வரை நீடிக்கும் கத்தரி வெயில் காலத்தில், மழை பெய்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, மாவட்டம் முழுவதும், ஒரு சில இடங்களில் கன மழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், மோகனுார், மணியங்காளிப்பட்டி, பேட்டப்பாளையம், எஸ்.வாழவந்தி உள்ளிட்ட பகுதிகளில் இரவு, 11:00 மணி முதல், நேற்று அதிகாலை, 4:00 மணி வரை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,ல்) வருமாறு: எருமப்பட்டி, 30, மோகனுார், 12, நாமக்கல், 32, ப.வேலுார், 44, புதுச்சத்திரம், 7, சேந்தமங்கலம், 7, கலெக்டர் அலுவலகம், 7.20, கொல்லி
மலை, 18 என, மொத்தம், 157.20 மி.மீ., மழை பதிவானது.