/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பகீர் தகவல்

ADDED : மார் 12, 2024 04:29 AM
நாமக்கல்: ''வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,'' என, ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. தி.மு.க., அரசு இதனை கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகிறது. அ.தி.மு.க., தலைமை உத்தரவின்படி, ஆளும் தி.மு.க., அரசை கண்டித்து, நாளை (இன்று), தமிழகம் முழுதும் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஒவ்வொரு நகராட்சி, டவுன் பஞ்., கிராம பஞ்.,களில் இருந்து குறைந்தது, 500 பேர் பங்கேற்கும் வகையில், மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக நடத்த வேண்டும்.
மேலும், லோக்சபா தேர்தல் பணிகளில் கட்சியினர் சுணக்கம் காட்டக்கூடாது. நாமக்கல் மாவட்ட வாக்காளர்கள் பட்டியலில், இறந்தவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இத்தகைய பெயர்களை நீக்க நடவடிக்கைகளை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.