/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீரின்றி வறண்டுள்ள பழைய பாளையம் ஏரி
/
தண்ணீரின்றி வறண்டுள்ள பழைய பாளையம் ஏரி
ADDED : ஜூலை 09, 2025 01:42 AM
நாமக்கல், பழையபாளையம் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டதால், வானம் பார்த்த ஏரியாக காட்சியளிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட கொல்லிமலை அடிவார பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் மிகப்பெரிய ஏரியாக, துாசூர் ஏரி 240 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இதேபோல், பழையபாளைத்தில் உள்ள சின்ன ஏரி, பெரிய ஏரி, 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரிகளுக்கு, கொல்லிமலையில் நல்ல மழை பெய்தால், மழைநீர் காற்றாற்று வெள்ளமாக மாறி, சேந்தமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் வருவதற்காக கருவாட்டாறும், பழையபாளையத்தில் அருகில் உள்ள மலையில் இருந்து நேரடியாக தண்ணீர் வருவதற்காக, சிறிய ஆறும் உள்ளது.
கடந்த நவம்பரில் பெய்த கனமழையால், இரு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரில், ஏரி நிறைந்து கடல் போல் காட்சியளித்தது. இதனால், 500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். ஏரி நிறைந்தால் விவசாயிகள் இரு போகம் நெல் நடவு செய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு துவக்கத்தில் இருந்து தொடர்ந்து நல்ல வெயில் அடிப்பதால், கடல் போல் காட்சியளித்த ஏரி தற்போது, படிப்படியாக தண்ணீர் குறைந்து வானம் பார்த்த ஏரியாக காட்சியளிக்கிறது.

