/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது
/
சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது
சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது
சிகிச்சை பெற்று வந்தவர் பலி: கல்லால் தாக்கிய நண்பன் கைது
ADDED : ஆக 02, 2024 01:45 AM
பள்ளிப்பாளையம்,ஆயக்காட்டூர் பகுதியில் சிகிச்சையில் இருந்த தொழிலாளி பலியானதால், கல்லால் தாக்கிய நண்பனை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே ஆயக்காட்டூரை சேர்ந்த தனபால், 27. அதே பகுதியை சேர்ந்த ராஜி, 27, இருவரும் நண்பர்கள், கட்டட தொழிலாளர்கள். கடந்த, 30ம் தேதி இரவு, இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்து போதையில் இருந்துள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜி, கல்லால் தனபாலை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த, 31 இரவு தனபால் இறந்துள்ளார்.
பள்ளிப்பாளையம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, ராஜியை நேற்று கைது செய்தனர்.