/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
/
மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
ADDED : அக் 25, 2024 01:12 AM
மாரியம்மன் கோவிலில்
கம்பம் நடும் விழா கோலாகலம்
ராசிபுரம், அக். 25-
ராசிபுரத்தில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஐப்பசி மாத திருவிழா கடந்த செவ்வாய்கிழமை இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஊர் முக்கிய பிரமுகர்கள், கையில் பூக்களுடன் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று, பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூக்கூடைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து நித்திய சுமங்கலி மாரியம்மன் மேல் பூக்களை கொட்டி பூச்சாட்டினர்.
நேற்றிரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கம்பத்திற்கு மஞ்சள் பூசி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நவ., 4ல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5ல், கொடியேற்று விழா, 7 அதிகாலை, 4:00 மணிக்கு தீ மிதிக்கும் நிகழ்ச்சி, மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி சப்தாபரணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.