sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.சி., மார்க் சீட் வழங்கும் பணி துவக்கம்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.சி., மார்க் சீட் வழங்கும் பணி துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.சி., மார்க் சீட் வழங்கும் பணி துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.சி., மார்க் சீட் வழங்கும் பணி துவக்கம்


ADDED : மே 18, 2025 05:10 AM

Google News

ADDED : மே 18, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிய-ருக்கு டி.சி., மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவு, கடந்த, 8ல் வெளியானது. அதை தொடர்ந்து, 'மாணவ, மாணவியர் தங்களு-டைய உயர் கல்வியை தொடர வசதியாக, தற்காலிக மாற்று சான்-றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பதிவிறக்கம் செய்து வழங்கலாம்' என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, தேர்வு முடிவு வெளியான மறுநாளில் இருந்து, மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்-றிதழ் வழங்கும் பணி கடந்த, 9 முதல் துவங்கி மேற்கொள்ளப்ப-டுகிறது. பள்ளி தலைமையாசிரியர் சீனிவாச ராகவன், சான்றிதழ் கேட்டு வந்த மாணவர்களுக்கு, மதிப்பெண் மற்றும் மாற்று சான்-றிதழ் வழங்கி வருகிறார். இதேபோல், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கலைச்-செல்வி, மாணவியருக்கு, மாற்று சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், இப்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்-பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us