/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் கொட்டிய மழை ஜி.ஹெச்.,ல் புகுந்த வெள்ளம்
/
ராசிபுரத்தில் கொட்டிய மழை ஜி.ஹெச்.,ல் புகுந்த வெள்ளம்
ராசிபுரத்தில் கொட்டிய மழை ஜி.ஹெச்.,ல் புகுந்த வெள்ளம்
ராசிபுரத்தில் கொட்டிய மழை ஜி.ஹெச்.,ல் புகுந்த வெள்ளம்
ADDED : அக் 07, 2024 03:49 AM
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சி, பேளுக்கறிச்சி, கவுண்டம்பா-ளையம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், மெட்டாலா, ஆர்.புதுப்-பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது.
நேற்று காலையிலும் துாறலாக தொடர்ந்தது. இந்த மழையால் ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குறிப்பாக பழைய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் சாலை, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது.ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ராசிபுரத்தில், 122 மி.மீ., மழை பதிவானது.