/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
/
ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
ADDED : செப் 22, 2025 02:15 AM
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை, தமிழகத்தில் சுற்றுலா தலமாக விளங்குகிறது. அதிக கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பகுதியாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக, டூவீலரில் சுற்றுலா வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, எட்டுக்கை அம்மன் கோவில், அறப்பளீஸ்வரர் கோவில், மாசி பெரியசாமி கோவில்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.
நேற்று, புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.தற்போது, தொடர் மழை பெய்து வருவதால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வீட்டுக்கு செல்லும்போது, சோளக்காடு பகுதியில் உள்ள பழங்குடியினர் சந்தையில் வீட்டிற்கு தேவையான பழ வகைகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.