/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சபரிமலை சீசனால் குறைந்தது கறிக்கோழி கொள்முதல் விலை
/
சபரிமலை சீசனால் குறைந்தது கறிக்கோழி கொள்முதல் விலை
சபரிமலை சீசனால் குறைந்தது கறிக்கோழி கொள்முதல் விலை
சபரிமலை சீசனால் குறைந்தது கறிக்கோழி கொள்முதல் விலை
ADDED : நவ 23, 2024 03:01 AM
நாமக்கல்: சபரிமலை சீசனால், கறிக்கோழி விற்பனை சரிந்து கொள்முதல் விலை ஒரே நாளில், 15 ரூபாய் குறைந்துள்ளது. இது, பண்ணை-யாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்-யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படு-கிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) தினமும் நிர்ணயம் செய்கிறது. கடந்த அக்., 1ல், ஒரு கிலோ, 107 ரூபாய்க்கு விற்ற கறிக்-கோழி, ஏற்ற இறக்கம் காணப்பட்டு, தீபாவளி அன்று, 113 ரூபா-யாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, நவ., 2ல், 98, 6ல், 104, 9ல், 106, 11ல், 89, 12ல், 91, 15ல், 86, 17ல், 91, 18ல், 93 என, ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. இதற்கிடையில், நேற்று முன்தினம், 15 ரூபாய் குறைக்கப்பட்டு, ஒரு கிலோ, 78 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில், 15 ரூபாய் சரிந்துள்ளது, பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்-ளது.
இதுகுறித்து, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்-மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், ''சீதோஷண மாற்றம், சபரிமலை சீசனால், தமிழகம், கர்நாட-காவில் கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. இரண்டு வாரங்களில் நிலைமை சீராகி, விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
முட்டை விலை ௫௫௦ காசாக நிர்ணயம்
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 545 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 600, ஐதராபாத், 565, விஜயவாடா, 580, பர்வாலா, 606, மும்பை, 630, மைசூரு, 592, பெங்களூரு, 592, கோல்-கட்டா, 645, டில்லி, 640 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டைக்கோழி விலை கிலோ, 100 ரூபாய்; கறிக்கோழி விலை கிலோ, 78 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்டது.