/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதிலும் தூத்ததுக்குடி மீனவர்கள் 22பேரை கைது செய்தது இலங்கை கப்பற்படை

UPDATED : ஆக 05, 2024 09:45 PM
ADDED : ஆக 05, 2024 09:27 PM

சென்னை: தமிழக மீனவ பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கப்பற் படை கைது செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கப்பற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். அதில் ஒரு மீனவர் பலியானார். இச்சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீதான இலங்கை கப்பற்படையின் கைது நடவடிக்கை குறித்து , தமிழக மீனவ பிரதிநிதிகள் தலைநகர் டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினர்.
அமைச்சரை சந்தித்து பேசிய நிலையில் இன்று (ஆக.,5) தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி மகாராஜா43, அந்தோணி டேனிலா 23, ஆகியோரது இயந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 பேரை இலங்கை மன்னார் தென் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அமைச்சரை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசிய நிலையில் இலங்கை கப்பற்படையினரால் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.