/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2025 07:21 AM
நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது, அனைத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம் என, நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக, நேற்று முன்தினம் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் பணிபுரிந்து, பதவி இறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கான அரசால் வழங்கப்பட்ட ஆணையை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும், 21ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது.