/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணி முடியாத கழிப்பிடம் 2 ஆண்டுகளாக வீண்
/
பணி முடியாத கழிப்பிடம் 2 ஆண்டுகளாக வீண்
ADDED : மே 06, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியம், நெ.3.கொமராபாளையம் பஞ்சாயத்து, 5-வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் கழிப்பிடம் கட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது வரை கட்டுமான பணிகள் பாதியில் நிற்பதால், இப்பகுதி மக்கள் திறந்தவெளி பகுதியை கழிப்பிடமாக பயன்
படுத்தி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் பாதியில் நிற்கும் பெண்கள் கழிப்பிட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*******