/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சகதியான இடத்தில் தண்ணீர் பிடிக்கும் அவலம்
/
சகதியான இடத்தில் தண்ணீர் பிடிக்கும் அவலம்
ADDED : நவ 04, 2024 04:44 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு டவுன் பஞ்., மூலம் காவிரி குடிநீர் வீதி வாரி-யாக சின்டெக்ஸ் தொட்டி வைத்து, தினமும் வினியோகம் செய்-யப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் வீடுகளுக்கு தனியாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். ஆனால், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் பிடித்து பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், 18வது வார்டு வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் சின்டெக்ஸ் தொட்டி முன் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உள்ள நிலையில், குடிநீர் வரும் போது அங்கேயே குடம் வைத்து தண்ணீர் பிடிக்கும் அவலம் ஏற்-படுகிறது. இதனை சுகாதாரத்துறையினர் கண்காணித்து, துாய்-மைப்படுத்த வேண்டும்.