/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோமேஸ்வரர் கோவில் குளத்தில் சேற்றை துார்வாரும் பணி விறுவிறு
/
சோமேஸ்வரர் கோவில் குளத்தில் சேற்றை துார்வாரும் பணி விறுவிறு
சோமேஸ்வரர் கோவில் குளத்தில் சேற்றை துார்வாரும் பணி விறுவிறு
சோமேஸ்வரர் கோவில் குளத்தில் சேற்றை துார்வாரும் பணி விறுவிறு
ADDED : நவ 10, 2024 01:28 AM
சோமேஸ்வரர் கோவில் குளத்தில்
சேற்றை துார்வாரும் பணி விறுவிறு
சேந்தமங்கலம், நவ. 10-
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பகுளத்தில், ராட்சத இயந்திரம் மூலம் சேற்றை துார்வாரும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள தெப்பகுளம், கடந்த, 40 ஆண்டாக பராமரிப்பின்றி, கழிவுநீர் கலந்து மாசடைந்து காணப்பட்டது. பக்தர்கள், இந்த தெப்ப குளத்தை துார்வார வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சேந்தமங்கலம் டவுன் பஞ்., சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், துார்வாரி தெப்பகுளத்தை துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, குளத்தில் இருந்த கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது, ராட்சத இயந்திரம் மூலம் குளத்தில் இருந்த சேற்றை துார்வாரும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இப்பணிகள், 4 வாரத்தில் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.