/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்
/
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்
ADDED : டிச 09, 2024 07:11 AM
நாமக்கல்: கார்த்திகை தீப திருநாள், வரும், 13ல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது வீடு, வர்த்தக நிறுவனங்கள், கோவில்களில் மண்ணில் தயாரிக்கப்படும் அகல் விளக்கேற்றி சுவாமியை வழிபாடு செய்வர்.
இந்த அகல் விளக்குகள், அலங்காநத்தம் பிரிவு அடுத்த போடிநாயக்கன்பட்டியில் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் நாமக்கல், சேலம், கரூர், தர்மபுரி, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து, அகல் விளக்கு தயாரிக்கும் செல்வராஜ் கூறியதாவது: இப்பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். சீசனுக்கேற்ப கோடைகாலத்தில் பொங்கல் பானை, அடுப்பு, சிட்டி விளக்கு உள்ளிட்டவைகள் செய்கின்றோம். விளக்கு செய்வதற்காக புதுச்சத்திரம், ஏளூர், அகரம் ஏரி பகுதி மற்றும் கரியபெருமாள் ஏரி உள்ளிட்ட பகுதியில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு கை விளக்கு செய்கின்றோம்.
தொடர்ந்து சூளையில் இட்டு தரமான வகையில் தயார் செய்கின்றோம். போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையிலும் குலத்தொழிலை விடக்கூடாது என்பதால் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நாள் ஒன்றுக்கு, 2,000 முதல், 3,000 விளக்குகள் தயாரிப்போம். மூன்று வடிவத்தில் தயாரிக்கப்படும் கைவிளக்குகள், 1,000 விளக்குகள், 1,000 ரூபாய் முதல், 1,250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை சற்று கூடுதலாக இருந்த போதிலும் கைவிளக்கில் தான் விளக்கேற்ற வேண்டும் என்ற ஐதீகத்தால், தற்போது விற்பனை சூடுபிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.