/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்
/
மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்
ADDED : நவ 06, 2025 01:56 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார், ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில், ஐப்பசி தேர் திருவிழா, அக்., 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 23ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடந்தது.
நேற்று அதிகாலை, அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தீமிதி விழா துவங்கியது. 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அலகு குத்திக்கொண்டும், குழந்தைகளை துாக்கி கொண்டும், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு, சக்தி அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலை, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, சத்தாபரணத்துடன் விழா, நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் மாரியம்மன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

