/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓம் சக்தி முருகன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
/
ஓம் சக்தி முருகன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ஓம் சக்தி முருகன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ஓம் சக்தி முருகன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 19, 2025 01:49 AM
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த திம்மநாயக்கன்பட்டி அருகே, வேப்பிலைக்குட்டையில் பிரசித்தி பெற்ற ஓம்சக்தி முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று ஆடி முதல் வெள்ளியில் திருவிழா துவங்கியது. இக்கோவிலில் அமைந்துள்ள, 48 அடி உயரத்தில் உள்ள ஆறுபடை முருகன் சிலை, 48 அடி உயரத்தில் எட்டுகை அம்மன், 28 அடி உயரத்தில் அஷ்டகால பைரவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
குழந்தைகள் எடைக்கு எடை காணிக்கை செலுத்தும் துலாபாரம் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலை சுற்றி உருளுதண்டம் போட்டனர். சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய விதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.
கோவில் பூசாரி, தீமிதித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உற்சவர் சிலை, கோவில் வேல், பரிவார சுவாமிகளை சுமந்து சென்று தீமிதித்தனர். 500க்கும் மேற்பட்ட பெண்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, சேலம், திருச்சி, தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து, 3,000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.