/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அப்புச்சிமார் கோவிலில் சிலைகள் திருட்டு
/
அப்புச்சிமார் கோவிலில் சிலைகள் திருட்டு
ADDED : பிப் 17, 2024 12:58 PM
மோகனுார்: மோகனுார் தாலுகா, மாடகாசம்பட்டியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அப்புச்சிமார் கோவில் உள்ளது. இங்கு, பழமைவாய்ந்த அப்புச்சிமார் சிலை இருந்தது. அதேபோல், அதன் அருகே மாரியம்மன், விநாயகர் கோவில்களும், தனித்தனியாக அமைந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவில், பூட்டை உடைத்துக்கொண்டு இக்கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அப்புச்சிமார், மாரியம்மன், விநாயகர் சுவாமிகளின் கற்சிலைகளை திருடி சென்றனர்.
தகவலறிந்த ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர், கோவில் அறங்காவலர் ஜெகநாதன், மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., இளைய சூரியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முன் விரோதம் காரணமாக சிலையை திருடி சென்றனரா, திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி சென்றனரா என, பல்வேறு கோணங்களில், மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.