ADDED : பிப் 28, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல்லின் அடையாளமாக மலைக்கோட்டையும், அதனை சுற்றியுள்ள திருப்பாற்குளம், ஜெட்டிக்குளம், கமலாலயக்குளம், ஆஞ்சநேயர் கோவில், நரசிமர் கோவில், அரங்கநாதர் கோவில் ஆகியவை திகழ்கின்றன. அதில், கமலாலயக்குளம், 2017ல் துாய்மைப்படுத்தப்பட்டு, மாலை நேரத்தில் படகு சவாரி நடக்கிறது. இந்த குளத்தில், 100 ஆண்டுக்கு முன் தெப்ப உற்சவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு பங்குனி தேர் திருவிழா ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மார்ச், 12ல் தெப்ப உற்சவம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அன்று மாலை, 5:00 மணிக்கு நரசிம்மர், நாமகிரி தாயார், அரங்கநாதர், ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகளாக தெப்பத்தில் வலம் வரும் வகையில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.