/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சங்கடை ரூ.100க்கு விற்றாலும் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி
/
சங்கடை ரூ.100க்கு விற்றாலும் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி
சங்கடை ரூ.100க்கு விற்றாலும் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி
சங்கடை ரூ.100க்கு விற்றாலும் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி
ADDED : ஆக 19, 2025 03:28 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், கழுதை பால் ஒரு சங்கடை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ராசிபுரம், மேட்டுத்தெரு, சேலம் ரோடு, நாமக்கல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் கழுதை பால் விற்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கழுதைகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு நகரமாக இந்த பெண் கழுதை பால் விற்பனை செய்து வருகிறார். கழுதை பால் குடித்தால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு கழுதை பாலை வாங்கி கொடுத்தனர். 100 மில்லி கொள்ளளவு உள்ள ஒரு சங்கடை பால், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், ஒரு நாளைக்கு ஐந்து சங்கடை அளவுதான் பால் கறக்க முடியும் என்பதால், காலை, மாலை காத்திருந்து கழுதை பாலை வங்கி குடிக்கின்றனர். சிலர் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் போன் இல்லாததால், கழுதையை அழைத்துவரும் பெண் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, பாலை கறந்து தருகிறார். ஒரு சங்கடை, 100 ரூபாய்க்கு விற்றாலும், கழுதை பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

