/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சந்தை வளாகம் முன் வடிகால் வசதி இல்லை மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் அதிருப்தி
/
சந்தை வளாகம் முன் வடிகால் வசதி இல்லை மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் அதிருப்தி
சந்தை வளாகம் முன் வடிகால் வசதி இல்லை மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் அதிருப்தி
சந்தை வளாகம் முன் வடிகால் வசதி இல்லை மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : நவ 17, 2024 07:01 AM
ப.வேலுார்:இன்று முதல், புதிய வாரச்சந்தை வளாகம் செயல்பட உள்ள நிலையில், வடிகால் வசதி இல்லாததால் சந்தையை சுற்றி தேங்-கிய மழை நீரால் வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ப.வேலுார், சுல்தான்பேட்டையில், கலைஞர் நகர்ப்புற மேம்-பாட்டு திட்டத்தில், ஒரு கோடியே, 47 லட்சம் ரூபாய் மதிப்-பீட்டில், 60 கடைகள் கட்டப்பட்டன. இன்று முதல் சந்தை வளாகம் செயல்பட உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் அவசரகதியில் திறக்கப்பட்டதால், சந்தை வளாகம் முன் வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், இன்று வாரச்சந்தை திட்டமிட்டபடி தொடங்குமா என கேள்விக்-குறி எழுந்துள்ளது.இதுகுறித்து, சந்தை வியாபாரிகள் கூறியதாவது: ப.வேலுார் வாரச்சந்தை, 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரிகள் உள்ளபோது, 60 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அவசர கதியில் திட்டமிடாமல் புதிய வாரச்சந்தை திறக்கப்பட்டதால் வியாபாரிகள், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். தற்போது, புதிய வாரச்சந்தை முழு-வதும் வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்கியுள்ளதால், கடை அமைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. புதிய வாரச்சந்தையில் கடை அமைக்க இயலாமல் போனால், பழைய வாரச்சந்தையில் கடை அமைக்க அனுமதிக்க வேண்டும். நாளை (இன்று) பழைய வாரச்சந்தையில் கடை போடலாம் என திட்டமிட்டுள்ளோம். புதிய வாரச்சந்தையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து, வடிகால் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தையில் கழிப்பிட வசதி இல்லை. அருகிலுள்ள கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இலவச கழிப்பிடத்தை கட்டித்தர வேண்டும். மேலும், புதிய வாரச்சந்தையை சீரமைத்து தராவிடில் விவசா-யிகள், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுப-டுவோம். மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.