/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க எந்த தடையும் இல்லை: கலெக்டர்
/
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க எந்த தடையும் இல்லை: கலெக்டர்
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க எந்த தடையும் இல்லை: கலெக்டர்
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க எந்த தடையும் இல்லை: கலெக்டர்
ADDED : செப் 06, 2025 01:47 AM
ராசிபுரம், :'ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க எந்த தடையும் இல்லை; இதில் முடிவெடுக்க ராசிபுரம் நகராட்சிக்கு முழு அதிகாரம் உள்ளது' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, கடந்தாண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தீர்மானத்தை எதிர்த்தும், தானமாக நிலத்தை பெறக்கூடாது எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து, மக்களிடம் கருத்து கேட்டுகுமாறும், நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்த மனுதாரர்களை தனியாக அழைத்து பிரச்னையை நேரில் கேட்குமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் மூலம் கருத்து கேட்கப்பட்டது. அதில், 7,609 மனுக்களில், 4,444 மனுக்கள் புதிய இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு ஆதரவாகவும், 3,165 மனுக்கள் புதிய இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும், நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்த, 15 பேரையும் நேரில் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், 14 பேர் பங்கு கொண்டனர். அவர்களது கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை முடிவில், நகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டாம்; அணைப்பாளையத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான முழு முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரம் நகராட்சிக்கு உண்டு. பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான நிலத்தை தானமாக பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை. நிலம் கட்டுமான தரம் கொண்டது. புதிய பஸ் ஸ்டாண்டால், ராசிபுரம் மக்களுடைய பொதுநன்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.