/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
/
காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
ADDED : டிச 22, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை நிறுவியதன், 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, காளிப்பட்டியில் திருக்குறள் ஒப்பு-வித்தல் போட்டி, ஓவியப்போட்டி நடந்தது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, காளிப்பட்-டியில் நேற்று கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட வள்ளுவர் சிலையை நிறுவியதன், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டவுன் பஞ்சாயத்து இ.ஓ., மூவேந்திரபாண்டியன் தலைமையில், மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருவள்-ளுவர் சிலையை ஓவியமாக வரையும் போட்டி நடந்தது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பித்தனர். மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.