ADDED : அக் 19, 2025 04:12 AM
ராசிபுரம்: 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திட்டத்தின் கீழ், 9வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில், பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளரும், ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளருமான பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில், ''வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனும் பாரதியின் பாடல் வரிகள் வள்ளுவரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும். நுாற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை, நம் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை எழுதி சிறப்பித்துள்ளார்,'' என்றார். தமிழாசிரியர் நித்யா, வள்ளுவனின் குறளின் மேன்மையை எடுத்துக்கூறினார். ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப தலைவர் சுதாகர் நன்றி கூறினார்.