/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கு
/
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கு
ADDED : டிச 27, 2024 07:34 AM
நாமக்கல்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகளானதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் உழவர் சந்தை அருகே உள்ள மாவட்ட மைய நுாலக அரங்கில், நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நுாலக அலுவலர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார் அறிமுக உரையாற்றினார்.
இதில், டாக்டர் எழில்செல்வன், 'நான் ரசித்த வள்ளுவம்' என்ற தலைப்பிலும், நல்லாசிரியர் விருது பெற்ற செந்தில்குமார், 'மேலிருந்தும் மேல் அல்லார் மேலல்லர்' என்ற தலைப்பிலும் திருக்குறள் குறித்தும் உரையாற்றினர். கருத்தரங்கில் மைய நுாலக வாசகர் வட்ட துணைத் தலைவர் கலைஇளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.