/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்றவர்கள் கைது
/
முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்றவர்கள் கைது
ADDED : டிச 09, 2024 07:11 AM
ராசிபுரம்: தமிழகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பத்து ரூபாய் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மாற்றம், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து பஸ்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாமக்கல் நகருக்குள் பழைய இடத்திலேயே அரசு மருத்துவமனையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் இன்று காலை, ஜார்ஜ் கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக, பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜ் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு நல்வினை விஸ்வராஜ் தலைமையில் மக்கள் தன்னுரிமை கட்சி நிர்வாகிகள், 3 பேர் உள்பட, 12 பேர் சென்னை செல்ல புறப்பட்டனர். தகவலறிந்த ராசிபுரம் போலீசார், 12 பேரையும் கைது செய்து ராசிபுரம் ரோட்டரி ஹாலில் தங்க வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.